நடிகர் ஸ்ரீகாந்த் கைது! 4 ஆண்டுகளாக போதைப் பொருள் சப்ளை செய்தவர் அதிமுக நிர்வாகி?

2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட்டுள்ளார். ஸ்ரீகாந்துக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து போதைப் பொருள் சப்ளை செய்து வந்தவர் அதிமுக நிர்வாகி பிரதீபன் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பார் தகராறில் கைதான பிரதீபன் என்பவர் போலீசாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் நாற்பது முறை போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரதீபன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை கீழ்ப்பாக்கத்தில் வைத்து போலீசார் பல மணி நேரம் பரிசோதனை மேற்கொண்டனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் வாங்கியது செல்போன் மூலம் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Say No to Drugs and DMK என்ற வாசகத்தை பயன்படுத்தி வரும் அதிமுக கட்சி நிர்வாகி போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருப்பது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.