நடிகர் சிவாஜி பட இசை கலைஞர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்!

 
MPN Ponnusamy

பிரபல நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 90.

1968-ல் சிவாஜி நடிப்பில் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் நலம்தானா பாடலில் ஒலிக்கும் நாதசுர இசை எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கியவர்கள், நாதசுரக் கலைஞர்களான திருவாளர்கள் மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள் ஆவர்.

MPN Ponnusamy

இவர்களது குழுவில் தேவூர் சந்தானம் மற்றும் திருவிடைமருதூர் வெங்கடேசன் ஆகியோர் தவில் வாசித்துள்ளனர். காரைக்குடியில் சகோதரர்கள் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி இணைந்து திருமண நிகழ்வில் நாகஸ்வரம் வாசித்தபோது ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மூலம் பெற்றுள்ளனர்.

RIP

இந்தப் படம் வெளியான பிறகு பிரபலங்கள் பலர் பங்கேற்ற விழாக்களில் நாகஸ்வரம் இசைக்கும் பணியை பொன்னுசாமி பெற்றுள்ளார். தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தினர் நாகஸ்வரம் வாசித்து வந்துளனர். 1977-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கியது. 1997-ல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருதை பெற்றுள்ளார்.

From around the web