நடிகர் சிலம்பரசன் வீட்டில் விசேஷம்.. ரசிகர்கள் வாழ்த்து!

 
Simbu

நடிகர் சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள், தனிக்கென தனி வழி என்று சென்று கொண்டிருப்பவர் சிம்பு. இவர் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகர், கதாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என பன்முகத தன்மை கொண்டவர். இவர் சில காலமாக சினிமாவில் நடிக்காமல் போனதையடுத்து தற்போது மீண்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாநாடு படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.

simbu

நடிகர் சிம்புவுக்கு குரளறசன் என்ற தம்பியும், இலக்கியா என்ற தங்கையும் உள்ளனர். இதில் இலக்கியாவுக்கு ஜேசன் என்ற ஒரு மகன் உண்டு. இந்த குழந்தையோடு நடிகர் சிம்பு பதிவிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ரசிகர்களைக் கவர்வதுண்டு. குரளறசன் இசையில் ஆர்வம் கொண்டவர். இசையில் மட்டுமல்லாது இஸ்லாம் மதத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர்.

இஸ்லாம் மதத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட இவர், அண்ணா சாலையில் உள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். பின்பு, கடந்த 2019-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த நபீலா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

Simbu

இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த நபீலா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார். இதனால், சிம்புவின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது. இந்த நல்ல செய்திக்கு சிம்புவுக்கும், அவரது குடும்பத்திற்கும் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது.இ

From around the web