படப்பிடிப்பில் ரத்தம் செட்ட செட்ட.. விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Shah Rukh Khan

அமெரிக்காவில் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பதான்’ படம் மாபெரும் ஹிட் அடித்து வசூலை வாரிக்குவித்தது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம்  உலகம் முழுவதும் 1,050 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ஷாருக்கான் அட்லி இயக்கத்தில் ’ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

Sharukh khan

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  இந்தப் படத்தி மூலம் நயன்தாரா, அனிருத், அட்லீ மூவருமே முதன்முறையாக பாலிவுட்டில் நேரடியாகக் கால் பதிக்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஷாருக்கான் சென்றிருந்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Jawan

காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பி உள்ளார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். மருத்துவர்கள் ஷாருக்கான் இல்லத்திற்கு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர். இதையடுத்து, அவருக்கு அடிப்பட்ட மூக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. 

From around the web