பிரபல நடிகர் ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்.. ரசிகர்கள் உற்சாகம்!

 
Ram charan

நடிகர் ராம் சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம்  வழங்க இருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண். 2007-ம் ஆண்டு வெளியான ‘சிறுத்தை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.அதன்பின் ஆரஞ்ச், ரச்சா, நாயக், ஜன்சீர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் ரீமேக்காக துருவா படத்தில் நடித்த ராம் சரண் மீண்டும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

Ram Charan

இந்த நிலையில், நடிகர் ராம் சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக வேல்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 13-ம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் ராம் சரண் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். பல்கலைக்கழக வேந்தர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ராம் சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்க இருக்கிறது.

திரைப்படத் துறை மற்றும் சமூகத்திற்கு ராம்சரண் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக வேல்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Simbu

ஆந்திரப் பிரதேசம் முதல் தெலங்கானா வரை பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகங்களை மேம்படுத்த தனது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து பணியாற்றுகிறார். குறிப்பாக கொரோனா தொற்றுநோய்களின் போது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கினார் போன்ற காரணங்களையும் வேல்ஸ் நிறுவனம் முன் வைத்துள்ளது.

From around the web