இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த்.. சாலையில் நின்றபடி கொடுத்த போஸ் வைரல்

 
Rajini

இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இல்லாமல் இமயமலைக்கு சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு இமயமலை பயணத்தை அப்படியே தவிர்த்து விட்டார்.

Rajini

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார்.

அங்கு அடுத்தடுத்த இடங்களில் அவர் சுற்றி வருவதை பார்க்க முடிகிறது. தினமும் ரஜினிகாந்தின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், நேற்று முன்தினம் அவர் இமயமலையில் சுற்றி திரிவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் பனிபடர்ந்த மலைகளின் பின்புலத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாலையில் நின்றபடி வெளியிட்டுள்ள புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. தன்னுடைய ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பவுள்ள ரஜினிகாந்த், கூலி படத்தின் ஷூட்டிங்கில் இன்னும் சில தினங்களில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இதற்கான முன் தயாரிப்பு பணிகளை லோகேஷ் கனகராஜ் நிறைவு செய்துள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் அறிவிக்கப்பட்டு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வித்தியாசமான ரோலில் நடிக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ள சூழலில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் புரோமோ ஆகியவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மாஸ் காட்டியுள்ளது.

From around the web