நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி உள்ளது?

 
Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Apollo Hospital

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி காட்டு தீ போல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு வரை ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த தகவல் பரவியபடி இருந்தது. இந்த தகவல் உண்மையா? வதந்தியா? உறுதிபடுத்த முடியாத தகவல்களால் ரசிகர்கள் தவித்தப்படி இருந்தனர். அப்போலோ மருத்துவமனை முன்பும் பல ரசிகர்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையே, செரிமான பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மருத்துவ பரிசோதனையில், அவருக்கு வயிற்றுப் பகுதி ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Rajini

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக் கூடிய அதிநவீன அறுவை சிகிச்சை என கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகளைக்கு பின்னர் ரஜினிகாந்த் இன்றே வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் மருத்துவமனை தரப்பில் இருந்து இன்னும் அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

From around the web