பிரபல நடிகர் பிரபாஸிற்கு திருமணம்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

 
Prabhas

நடிகர் பிரபாஸ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு ஸ்பெஷலான ஒரு நபர் குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2002-ல் வெளியான ‘ஈஸ்வர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து வெளியான ‘வர்ஷம்’ படத்தின் மூலம் பிரபலமானார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார்.

ஆனால், பாகுபலி படத்தை அடுத்து இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியை தழுவின. குறிப்பாக, கடந்த ஆண்டு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதி புருஷ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ராமன் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக பலரிடம் வசைபாடல்களையும் வாங்கினார். இதையடுத்து, இவரது சலார் படம் வெளியானது. இது தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் ஹிட் அடித்தது. 

Prabhas-21

பிரபாஸ் தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம், கல்கி 2898 ஏடி. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இந்த படம், வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. 

இதனிடையே நடிகர் பிரபாஸின் திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் வந்த போது அவர் அது எதற்குமே செவி சாய்த்ததில்லை. இந்த நிலையில் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். 

இதில் அவர், தன் வாழ்க்கையில் புதிதாக ஒருவர் நுழைய இருப்பதாகவும், கொஞ்சம் காத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இது, அவர் திருமணம் குறித்த அறிவிப்பாக இருக்குமோ என பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதுவாக இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன்தான் உண்மை தெரிய வரும். 

Prabhas

நடிகர் பிரபாஸும் அனுஷ்கா ஷெட்டியும் காதலித்து வருவதாக பல ஆண்டுகளாக அவர்களின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பாகுபலி படத்தில் ஒன்றாக நடித்த இவர்கள், அந்த சமயத்தில் காதலித்ததாகவும், இந்த உறவை வெளி உலகிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு இவர்கள் வேறு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. இதனால், இவர்கள் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூட தகவல்கல் வெளியானது. தற்போது திருமண சந்தேகங்களை கிளப்பும் வகையில் இவர் வெளியிட்டிருக்கும் பதிவு, ஒரு வேளை அனுஷ்காவுக்கும் இவருக்குமான திருமணம் குறித்ததாக இருக்குமோ என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

From around the web