நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் காலமானார்.. திரை பிரபலங்கள் இரங்கல்

நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.
1997-ம் ஆண்டு ‘தாயவ்வா’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் கிச்சா சுதீப். தமிழில் அஜித் நடித்த வாலி படத்தின் கன்னட வெர்ஷனாக அதே டைட்டிலில் வெளியான வாலி படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்து அசத்தினார். அஜித்தின் தீனா படத்தை தம் என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். 2003ம் ஆண்டு வெளியான கிச்சா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், சுதீப் என்கிற பெயர் அதன் பின்னர் கிச்சா சுதீப் என மாறியது.
அதனைத் தொடர்ந்து, ராஜமெளலி இயக்கத்தில் நானி, சமந்தா நடித்த ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து பான் இந்தியா அளவில் ரீச் ஆனார். ‘பாகுபலி’ படத்திலும் கட்டப்பா சத்தியராஜுடன் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருப்பார். தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
இந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் (86) வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சரோஜா சஞ்சீவ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.