நானும் லோகேஷும் சீக்கிரம் வருகிறோம்.. ‘கைதி-2’ பட அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி!

 
Karthi

சென்னையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, ‘கைதி 2’ எப்போது வரும் என்பது குறித்து பேசினார்.

2019-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளியான படம் ‘கைதி’. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. நடிகர் கார்த்தி மனதில் நிற்கும்படியான ரோலில் நடிக்க கதாநாயகி, பாடல் என எதுவுமே இல்லாமல், கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் கைதி. மாநகரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது திரைப்படமாக கைதி வேற லெவல் ஹிட்டு கொடுத்தது.

Kaithi-2

நடிகர் கார்த்தி, ‘டில்லி சீக்கிரம் திரும்பி வருவான். அடுத்த வருடம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். நானும் இப்போது ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களை முடித்து விடுவேன். லோகேஷும் ‘ரஜினி 171’ படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்திற்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வருகிறோம்” என்று அப்டேட் கொடுத்தார்.


அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியாரே' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் '96' பட புகழ் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே 'சர்தார் 2' உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web