நடிகர் காளிதாஸ் ஜெயராம் நிச்சயதார்த்தம்.. பெண் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்!

 
Kalidas

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் ஜெயராம். இவர் மலையாள நடிகை பார்வதியை காதலித்து கரம்பிடித்தார். இந்த தம்பதிகளுக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் காளிதாஸ் தமிழில் ‘ஒரு பக்க கதை’, ‘விக்ரம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Kalidas

அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் மகனாக நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமன்றி ஓடிடி தளங்களிலும் காளிதாஸ் சிறப்பித்து வருகிறார். குறிப்பாக ’பாவ கதைகள்’ ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய ‘தங்கம்’ கதையில் சத்தார் என்ற பால் புதுமையராக தோன்றி கவனம் ஈர்த்தார். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்திலும் காளிதாஸ் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடிகர் காளிதாஸ் தான் தாரிணி காளிங்கராயரை காதலித்து வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். மாடலிங்கில் துறையில் கவனம் செலுத்தி வரும் தாரணி 2019-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த காளிதாஸ் - தாரிணிக்கு பெற்றோர் சம்மதத்துடன் நேற்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


திரைத்துறை பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ இந்த நிச்சயதார்த்த விழா விமரிசையாக நடைபெற்றது. இது தொடர்பானப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web