நூலிழையில் உயிர்தப்பிய நடிகர் ஜீவா.. உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்.. பரபரப்பு காட்சிகள்!
பிரபல நடிகர் ஜீவா மனைவியுடன் சென்ற கார் சின்னசேலம் அருகே விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2003-ல் வெளியான ‘ஆசை ஆசையாய்’ படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜீவா. தொடர்ந்து தித்திக்குதே, ராம், டிஷ்யும், ஈ, கற்றது தமிழ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது பிளாக் என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அவர், அறிமுகமாகி 21 வருடங்களை நிறைவு செய்துள்ளதையடுத்து ‘டெஃப் ஃப்ராக்ஸ் ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு கள்ளக்குறிச்சி வழியாக சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கார் வந்த திசையில் சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்தது. இதனால், இருசக்கர வாகனம் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று கார் மூலமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி சேலத்திற்கு சென்றனர்.
கார் விபத்தில் உயிர் தப்பிய Actor Jiiva ! #Jiiva #jeeva #CarAccident #kallakurichidistrict pic.twitter.com/ohSWwe0yiD
— ANA (@anglenewsagency) September 11, 2024
இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய காரை பறிமுதல் செய்து, விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்பட நடிகரான நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அணி திரண்டு சென்றதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.