நடிகர் தனுஷ் நடிக்கும் ‘குபேரா’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 
Kubera

தனுஷ் நடிக்கும் 51வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தனுஷின் பயணம் டோலிவுட், பாலிவுட் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது. ப பாண்டி படத்திற்கு பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த தனுஷ், தற்போது ஒரே ஆண்டில் அடுத்தடுத்த படங்களை அறிவித்து இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கடந்த  ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் வசூலையும் குவித்தது.

Dhanush 51

இதை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவரின் 51-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து படப்பிடிப்புத் தொடங்கியது. திருப்பதியில் நடந்த இதன் படப்பிடிப்பில் அடர் தலைமுடி மற்றும் தாடியுடன் நடிகர் தனுஷ் இருந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. அதன் பிறகு கிளீன் ஷேவ், ஹேர்கட்டில் இளமையான தோற்றத்திற்கு மாறினார் தனுஷ். 


இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் படத்திற்கு குபேரா என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web