பிரபல நடிகர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், பிரபல நடிகை சுஹாசினியின் தந்தையுமான நடிகர் சாருஹாசன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1979-ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாருஹாசன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழில்களில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். கன்னட மொழியில் ‘தபரன கதே’ என்ற படத்தில் இவரின் அபரா நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் நடித்த சாருஹாசன், கடைசியாக மைக் மோகனின் கம்பேக் திரைப்படமான ‘ஹரா’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவருக்கு 93 வயதாகிறது, வயது மூப்பின் காரணமாக நடிகர் சாருஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது சாருஹாசனின் மகளான சுஹாசினி அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து தன்னுடைய தந்தையை கட்டி அணைத்தபடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் “விடுமுறையா அல்லது என் தந்தைக்கு மருத்துவமனை தங்கும் இடம் என்கிறார்களா? அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மகள்களின் அன்புடனும் அக்கறையுடனும் அவர் நன்றாக இருக்கிறார் என்று சுஹாசினி பதிவு வெளியிட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாருஹாசன் அங்கு புத்தகம் ஒன்றை படித்துவிட்டு தன் பக்கத்திலேயே வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதற்கு நடிகை ராதிகா சரத்குமார், ‘ஹாசினி உன்னுடைய அப்பா அன்பான மனிதர். அவரை கவனித்துக் கொள்’ என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அவரை தொடர்ந்து சீரியல் நடிகை சத்யபிரியா, ‘விரைவில் குணமடையுங்கள் சாரு அண்ணா’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.