நடிகர் பிஜிலி ரமேஷ் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 
Bijili Ramesh

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46.

பிளாக்‌ஷீப் யூடியூப் சேனலின் பிராங்க் ஷோ மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். 2019-ல் ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ படத்தில் இவருக்கு நடிகராக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், அமலாபால் நடித்த ஆடை மற்றும் ஜெயம் ரவி நடித்த கோமாளி, யாஷிகா ஆனந்த் நடித்த ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கலக்கினார்.

Bijili Ramesh

குடிபோதை தனது வாழ்க்கையையே மாற்றி விட்டது என்றும் யாரும் குடிக்காதீங்க என எழுந்துக் கூட நிற்க முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த பிஜிலி ரமேஷ் சமீபத்தில் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 9.45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

Bijili Ramesh

ஒரு இடத்தில் நிற்க மாட்டேன், சும்மா சுத்திக்கிட்டே இருப்பேன். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் நான் செய்த தவறுகள் அதிகம், அதிகம் குடித்ததன் விளைவாக தற்போது உடல் நலம் முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். என்னைப் பார்த்தாவது அந்த மோசமான குடிப்பழக்கத்தை மற்றவர்கள் விட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என சமீபத்தில் அவர் அளித்த பேட்டியை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

From around the web