மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ்!

 
Arjun das

கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

2012-ல் வெளியான ‘பெருமான்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து 2019-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின் மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘ரசவாதி’ படத்தில் நடித்து வருகிறார். 

Arjun das

இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்து உள்ளார். இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகமாகிறார்.

கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற லோகேஷ் கனகராஜ் படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், முதன்முறையாக மலையாள சினிமாவுக்கு ஹீரோவாக வருகிறார். ஜூன் மற்றும் மதுரம் மற்றும் கேரளா க்ரைம் பைல்ஸ் என்ற வெப் சீரியலுக்குப் பிறகு அகமது கபீர் புதிய படத்தை இயக்குகிறார். 


இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது இப்படம் காதலை மையமாக வைத்து எண்டர்டெயினராக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web