பிரபல நடிகர் ஆண்ட்ரி ப்ராவர் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Andre Braugher

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 62.

1989-ல் வெளியான ‘க்ளோரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆண்ட்ரே ப்ராவர். தொடர்ந்து, ஸ்டிரைக்கிங் டிஸ்டன்ஸ், பிரைமல் ஃபியர், கெட் ஆன் தி பஸ், திக் ஆஸ் தீவ்ஸ், சிட்டி ஆஃப் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தொலைக்காட்சி மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

Andre Braugher

1998-ம் ஆண்டு ‘ஹோமிசைட்: லைஃப் ஆன் ஸ்ட்ரீட்’ என்ற தொடருக்காக சிறந்த நடிகருக்கான எம்மி விருதை ஆண்ட்ரே ப்ராவர் வென்றார். அதே போல, 2006-ம் ஆண்டு வெளியான ‘தீஃப்’ தொடருக்காவும் சிறந்த நடிகருக்கான எம்மி விருது வென்றார்.

2013 முதல் 2023-ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்த நகைச்சுவை தொடர் ‘ப்ரூக்லீன் 99’. இதில் கேப்டன் ரேமண்ட் ஹோல்ட் என்ற போலீஸ் உயரதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆண்ட்ரே ப்ராவர். கண்டிப்பான அதே சமயம் நகைச்சுவை கலந்து அந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

RIP

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஆண்ட்ரே ப்ராவர் கடந்த திங்கள்கிழமை (டிச. 11) அன்று காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆண்ட்ரேவுக்கு ஏமி ப்ராப்சன் என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

From around the web