நடிகர் ஆனந்தராஜ் மகளுக்கு திருமணம்.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

 
Anandraj

நடிகர் ஆனந்தராஜின் மகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

1988-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமானவர் ஆனந்தராஜ். இதைத்தொடர்ந்து அதே ஆண்டு அர்ஜுன் நடித்த தாய் மேல் ஆணை, சத்யராஜுடன் ஜீவா, பிரபுவுடன் என் தங்கச்சி படிச்சவ, விஜயகாந்த் - ராம்கி நடிப்பில் வெளியான செந்தூரப்பூவே, பாண்டியராஜனுடன் பாட்டி சொல்லை தட்டாதே, போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் அசத்தினார்.

90களில் படு பிஸியான நடிகராக மாறிய ஆனந்தராஜ், ஒரே வருடத்தில் 15 முதல் 16 படங்கள் வரை நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். குறிப்பாக இவர் வில்லனாக நடித்த நரசிம்மா, சூரிய வம்சம், பாட்டாளி, போக்கிரி, வில்லு, போன்ற பல படங்கள் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத படங்களாக உள்ளது.

Anandraj

கடந்த சில ஆண்டுகளாக ஆனந்த்ராஜ் நகைச்சுவை கேரக்டரில் நடித்து வருகிறார், குறிப்பாக ’நானும் ரவுடிதான்’ என்ற படம் இவருக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஆனந்தராஜ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். நடிப்பை தாண்டி அரசியலிலும், ஆர்வம் காட்டிய ஆனந்தராஜ் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய மகள் சஞ்சனாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு விரிஞ்சி என்பவருடன் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

Anandraj

இந்த நிலையில், நடிகர் ஆனந்தராஜ் மகளின் த்ரோ பேக் திருமண புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனந்தராஜ் மகளின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு அவருடைய மகள் மற்றும் மருமகனை வாழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web