மணக்க மணக்க பிரியாணி சமைத்த நடிகர் அஜித்.. வைரல் வீடியோ!

நடிகர் அஜித் தன்னுடன் பயணிக்கும் சக பைக் ரைடர்களுக்கு பிரியாணி சமைத்து பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது.
சமீபத்தில் சென்னைக்கு திரும்பிய நடிகர் அஜித்குமார், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடினார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட அவர், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8-ம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் மைதானத்தில் உட்கார்ந்து விளையாட்டை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூல் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், மத்திய பிரதேசத்தில் தன் குழுவினருடன் பைக் ரைடு கிளம்பியுள்ளார் அஜித். இந்நிலையில், இரவு நேரத்தில் தன்னுடன் பயணித்தவர்களுக்கு செஃபாக மாறி தனது ஸ்பெஷல் பிரியாணி ரெசிப்பியை செய்து பரிமாறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை ரசிகர்கள் பார்த்து வியப்படைந்து வருகின்றனர்.
AK biryani pic.twitter.com/N1I6DcmAQ6
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 21, 2024
நடிகர் அஜித் சிக்கன் பிரியாணி தயாரிப்பதில் வல்லவர். அவர் தயாரித்த பிரியாணியை சாப்பிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதனை பாராட்டி உள்ளனர்.