‘எதிர்நீச்சல்’ சீரியலிருந்து அதிரடி நீக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Vaishnavi Nayak

‘எதிர்நீச்சல்’ சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலங்கள், அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியவர் திருச்செல்வம். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்கள் தைரியமாக போராட வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  

படித்த பெண்களை ஆதி குணசேகரன் திருமணம் கொண்டு, அவரை வீட்டு வேலைகள் செய்யச் சொல்லி நான்கு சுவற்றுக்குள் அடைத்தது மட்டுமின்றி, தன்னுடைய தம்பிகளுக்கும், நன்கு படித்த பெண்களை திருமணம் செய்து வைத்து, அவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்.  இப்படி தன்னுடைய மூன்றாவது தம்பியான சக்திக்கு ஜனனி என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க, குணசேகரனுக்கு எதிராக ஜனனி எப்படி போராடி அதில் வெற்றி பெறுகிறார்? என்கிற விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

Vaishnavi Nayak

ஒவ்வொரு வாரமும், டிஆர்பி-யில் டப் கொடுத்து வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் இருந்து, தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ளது மட்டுமின்றி, அவரின் கதாபாத்திரம் இனி சீரியலில் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.

அதாவது, ஜனனியின் மாமன் மகளாக வாசுகி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் வைஷ்ணவி. துறுதுறுப்பான மற்றும் தைரியமான பெண்ணாக இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

Vaishnavi Nayak

மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் கதைக்களத்திற்கு இவருடைய கதாபாத்திரம் பயன்படாத காரணத்தால், இவரை சீரியலில் இருந்து முழுவதுமாக நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

From around the web