‘தங்கலான்’ படப்பிடிப்பில் விபத்து.. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
Vikram
தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Vikram
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக தங்கலான் உருவாகி வருகிறது. தங்கலான் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் தங்கலான் படப்பிடிப்பில் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 
Vikram
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்பார் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விக்ரம் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

From around the web