ஆதி குணசேகரனின் மாஸ் என்ட்ரி.. வெளியான ‘எதிர் நீச்சல்’ ப்ரோமோ.. யாருனு தெரியுமா?

 
Ethirneechal

‘எதிர்நீச்சல்’ சீரியலில் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிக்கு வருவது போல ஆதிசேகரனின் மாஸ் என்ட்ரியுடன் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கோலங்கள், அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியவர் திருச்செல்வம். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்கள் தைரியமாக போராட வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

படித்த பெண்களை ஆதி குணசேகரன் திருமணம் கொண்டு, அவரை வீட்டு வேலைகள் செய்யச் சொல்லி நான்கு சுவற்றுக்குள் அடைத்தது மட்டுமின்றி, தன்னுடைய தம்பிகளுக்கும், நன்கு படித்த பெண்களை திருமணம் செய்து வைத்து, அவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்.  இப்படி தன்னுடைய மூன்றாவது தம்பியான சக்திக்கு ஜனனி என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க, குணசேகரனுக்கு எதிராக ஜனனி எப்படி போராடி அதில் வெற்றி பெறுகிறார்? என்கிற விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

Marimuthu

இந்த நிலையில், ஆதி குணேசகரன் குரலில் ‘ஏம்மா ஏய்..’ என்ற வசனத்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் குவிந்த நிலையில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த நடிகர் மாரிமுத்து  திடீர் மாரடைப்பால் கடந்த மாதம் 8-ம் தேதி காலமானார். எதிர்நீச்சல் ரசிகர்களிடையே இவரின் திடீர் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாரிமுத்துவின் இழப்பை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று கதையை நகர்த்தி வந்தனர். இனி எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கபோகிறார்கள்? குணசேகரன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த மாரிமுத்துவின் அந்த தனித்துவமான நடிப்பை நிகர் செய்ய முடியுமா? என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அடுத்து நடிக்கப்போவது இவர்கள் தான் என்று பலரின் பெயரும் சொல்லப்பட்டு வந்தது.

அதில் பிரபல நடிகரும், எழுத்தாளருமான  வேல ராமமூர்த்தி, நடிகர் பசுபதி போன்றோர் பெயரும் அடிபட்டது. இந்த நிலையில், எதிர்நீச்சல் குழுவினர் அந்த சஸ்பென்ஸை தற்போது உடைத்துள்ளனர். ஆம், வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிக்கு வருவது போல ஆதி குணசேகரனின் மாஸ் என்ட்ரியுடன் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் முகம் முழுவதுமாக தெரியாவிட்டாலும் ஆதி குணசேகரனாக இனி எதிர்நீச்சல் தொடரில் நடிக்கப்போவது நடிகர்  வேல ராமமூர்த்தி தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடிக்கப் போகும் வேல ராமமூர்த்தியின் ஏம்மா ஏய்... மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

From around the web