இளம் நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி? ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
Anikha

நடிகை அனிகா சுரேந்தரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பேபி அனிகா பல படங்களில் நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடிகை அனிகா, அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்ததால், இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர்.

குட்டி பெண்ணாக சினிமாவில் நடிக்க வந்த அனிகா, தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக மாறி, பல முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மாறியுள்ளார். புட்ட பொம்மா என்ற மலையாளப் படத்தில் நடித்தார் கப்பேலா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Anikha

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பிப்ரவர் 24ம் தேதி வெளியானது. ஹீரோயினாக நடித்த இரண்டாவது படத்திலேயே முத்தக்காட்சியில் தயக்கமே இல்லாமல் நடித்திருந்தார். இது சர்ச்சை ஆனதால், ஓ மை டார்லிங் ஒரு காதல் படம் என்பதால், முத்தக்காட்சி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும்போதே இயக்குநர் முத்தக்காட்சி குறித்து கூறியிருந்தார் என விளக்கம் கொடுத்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிகா உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து இளம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். ஒரு சாயலில் இவர் நயன்தாரா போல இருப்பதால், நயன்தாராவின் விஸ்வாசிகள் அவரை குட்டி நயன்தாரா என அழைத்து வருகின்றனர்.

Anikha

இந்த நிலையில், அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது. அந்த போஸ்டரில், அனிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

From around the web