மேடையில் நடிகைக்கு திடீர் முத்தம்.. அத்துமீறிய தெலுங்கு இயக்குநர்.. பதறி போன நடிகை!

 
Mannara Chopra

பொது மேடையில் நடிகை மன்னரா சோப்ராவுக்கு இயக்குநர் ஏ.எஸ்.ரவிகுமார் சவுத்ரி திடீரென முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘திரகபதர சாமி’. டோலிவுட் ரொமாண்டிக் காமெடி படமாக இப்படம் உருவாகி வருகிறது. தமிழ் திரைப்படங்களான ‘சண்டமாருதம் ’, ‘காவல்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை மன்னரா சோப்ரா இப்படத்தில் ராஜ் தருணுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ராவின் அப்பா வழி உறவுக்காரப் பெண்ணான மன்னரா சோப்ரா தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், ‘திரபாதர சாமி’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர், நடிகைகள், படக்குழுவினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Mannara Chopra

விழாவில் டீசரை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ வெளியிட்ட நிலையில், தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், புகைப்படங்களுக்கு நடிகை மன்னரா சோப்ரா இயக்குநர் ரவிகுமார் சவுத்ரி உடன் இணைந்து போஸ் கொடுத்தபோது திடீரென இயக்குநர் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை மன்னரா பின் சமாளித்து சிரித்து சமாளித்தபடி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்.


டோலிவுட் வட்டாரத்தில் இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மன்னராவுக்கு இயக்குநர் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு கண்டனங்களைப் பெற்று வருகிறது.

From around the web