சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகை.. வெளியான ஷாக் அப்டேட்!

 
sagarikaghatge

நடிகையும் ஹாக்கி வீராங்கனையுமான சகாரிகா காட்கே சினிமாவை விட்டு விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2007-ல் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ‘சக் தே இந்தியா’. இந்தப் படம் பெண்கள் தேசிய ஹாக்கி அணியை அடிப்படையாகக் கொண்டு வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் மாடல் மற்றும் உண்மையான ஹாக்கி வீராங்கனை சகாரிகா காட்கே உட்பட பல நடிகைகள் நடித்திருந்தனர்.

Chakde

இந்தப் படத்தில், ப்ரீத்தி சபர்வாலாக நடித்த சகாரிகா தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தேசிய அளவில் ஹாக்கி விளையாடியதால் இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திருமணமான பிறகு, சகாரிகா காட்கே 'மாத்தூரா', 'ரஷ்' ஆகிய படங்களில் நடித்தார்.

sagarikaghatge

37 வயதான சகாரிகா இந்திய கிரிக்கெட் வீரரான ஜாகிர் கானை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்புக்கு பிரேக் விட்டிருக்கும் சகாரிகாவை திரையில் மிஸ் செய்வதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web