அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்? டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் சாதனை!!

சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெரும் வசூல் மழை பொழிந்து மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.
யுவராஜ் கணேசன் தயாரிப்பில் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இரண்டு பையன்களுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சசிகுமார் - சிம்ரன் குடும்பம் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் பற்றிய படம். சுட்டிப் பையனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது. சிம்ரன், சசிகுமார் ஜோடிப் பொருத்தமும் படத்திற்கு கூடுதல் பலம்.
யதார்த்தமான காட்சியமைப்புகளுடன் கோடை விடுமுறைக்கு வந்த குடும்பப்படமாக அமைந்தது படத்தின் வெற்றிக் காரணம் என்று சொல்லலாம். கடந்த ஆண்டு லப்பர் பந்து சத்தமில்லாமல் செய்த சாதனையை டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல் நாளில் 2 கோடி வசூலித்த நிலையில் 11ம் நாள் 6 கோடியை கடந்துள்ளது. கர்நாடகா, கேரளாவிலும் நல்ல வசூல் பெற்றுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னத் திரைப்படங்களின் வெற்றி தமிழ் சினிமா என்ற கனவு உலகத்தில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கை தருவதாகவும் உள்ளது,