கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம்.. தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு!

 
Vijayakanth

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் தினமும் பல்வேறு திரை பிரபலங்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Vijayakanth

இந்த நிலையில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் விஜயகாந்த் வீட்டுக்கும் நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SIAA

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தன் புகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 19.01.2024 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web