புரோக்கர்கள் இல்லாத வாழ்க்கையா? விமல் யோகிபாபு நடிப்பில் புதிய படம்!!
Apr 17, 2025, 09:40 IST

அன்றாட வாழ்க்கையில் புரோக்கர்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளார்கள் என்பதை நகைச்சுவையுடன் தெரியப்படுத்தும் புதிய படம் ஒன்றில் விமல் மற்றும் யோகிபாபு நடித்து வருகின்றனர். விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜித் இயக்கும் இந்தப் படத்தில் சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார். பவர்ஸ்டார் சீனிவாசன், எம்.எஸ். பாஸ்கர், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கரம் மசாலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. போகுமிடம் வெகுதூரமில்லை படத்திற்குப் பிறகு விமல் நடிப்பில் வெளியாகும் இந்த காமெடிப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.