ஷுட்டிங்கில் புகுந்த சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ!

 
Leopard

மகாராஷ்டிராவில் உள்ள கோர்ஜியான் பிலிம் சிட்டியில் சீரியல் ஷூட்டிங்கில் ஒரு சிறுத்தை உலாவியதை கண்டு நடிகர்கள், தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் கோரேகான் மாவட்டத்தில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு அருகே உள்ள கோர்ஜியான் பிலிம் சிட்டியில் பொதுவாக தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நடத்துவது வழக்கம். அந்த வகையில் மராத்தி தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு நேற்று 200 பேருடன் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

Leopard

அப்போது நேற்று மாலை 4 மணியளவில் திடீரென அப்பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. சிறுத்தையைப் பார்த்ததும், படப்பிடிப்பு குழுவினர் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். விலங்குகள் அவ்வப்போது நுழைவதால் இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அரசு மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் சினிமா தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஷியாம்லால் குப்தா கூறியதாவது, 200 பேருக்கும் மேல் அந்தப் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி வந்தோம். அதில் சிலர் தங்களது வாழ்க்கையை இழக்க வாய்ப்பிருக்கிறது.


இது முதல்முறையல்ல, கடந்த 10 நாட்களில் 4 முறை இந்த மாதிரியான சம்பவம் நடந்திருக்கின்றன. அரசு இதுபோன்று இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web