பிரபல சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியான பதிவு!

 
Dhivya

பிரபல சீரியல் நடிகை திவ்யா, தனக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நடிகை திவ்யா, ‘கேளடி கண்மணி’ தொடரின் மூலம் அறிமுகமானார். தற்போது ‘செவ்வந்தி’ தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இதையடுத்து ‘செல்லம்மா’ தொடரில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் அர்ணவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அதோடு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.

பின்னர் தனது கணவர் அர்னாவ் தன்னுடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா. இதையடுத்து அர்னாவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த திவ்யா, அர்னாவ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

Arnav-dhivya

இந்த நிலையில் பிரபல இணைய ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “பலரும் அவனே ஏமாத்திட்டு போயிட்டான். உனக்கு இந்த குழந்தை வேண்டாம்ன்னு அட்வைஸ் பண்ணாங்க. எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. கடவுள் கொடுத்த இந்த குழந்தையை பெற்றெடுக்கவே விரும்பினேன். 4 மாசத்துலயே பிரேக் எடுக்க விரும்பினேன். ஆனால் என் வாழ்க்கையில் என்னென்னவோ நடந்துவிட்டது. அதெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அதன் பிறகு பொருளாதார ரீதியாக நான் வேலை செய்ய வேண்டிய சூழல் வந்தது. இப்போது 9-வது மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 10-15 நாட்களில் குழந்தை பிறந்துவிடும். ஆனால் இன்னும் கூட ஓய்வெடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுப்பேன்” என்று  முன்னதாக தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திவ்யா தனக்கு குழந்தை பிறந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். அந்தப் பதிவில், இந்த காத்திருப்பு நீண்டது ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. மேலும் விசித்திரக் கதைகளைப் போல என்றென்றும் உன் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உன்னை காதலிக்கிறேன் என் அன்பு தேவதை, என் அழகான பெண் குழந்தை என தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.

From around the web