பிரபல சீரியல் நடிகர் தற்கொலை... வெளியான அதிர்ச்சி காரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Sampath J Ram

பிரபல கன்னட நடிகர் சம்பத் ஜே ராம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்தவர் சம்பத் ஜே.ராம். இவர் நடித்த ‘ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ’ சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று இருந்தது. மேலும் இவர் நடித்த ‘அக்னி சாக்ஷி’ என்ற தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

35 வயதாகும் நடிகர் சம்பத்திற்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீலமங்கலா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sampath J Ram

சம்பத் ஜே.ராம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. மேலும் தனது கேரியரில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளாலும், போதிய வாய்ப்பு கிடைக்காததாலும் மிகவும் வருத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சம்பத் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து சம்பத் ஜே ராமின் குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. சம்பத் ஜே ராமின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சம்பத்தின் மரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 

இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு குறித்து ராஜேஷ் துருவா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மகனே, உன் பிரிவைத் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை. எத்தனையோ திரைப்படங்கள் உருவாக வேண்டும், நிறைய சண்டைகள் செய்ய வேண்டியிருக்கிறது, உங்கள் கனவுகளை நனவாக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. நாங்கள் இன்னும் உங்களை பெரிய மேடையில் பார்க்க வேண்டும். தயவு செய்து திரும்பி வாருங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web