பிரபல நடிகை விபத்தில் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்!

 
Suchandra Dasgupta

பிரபல பெங்காலி நடிகை ஒருவர் ஷுட்டிங் முடிந்து வீட்டிற்கு சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்காலி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒருசில சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சுசிந்திரா தாஸ்குப்தா (29). இவர் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் சுசிந்திரா தாஸ்குப்தா பங்கேற்று நடித்து வருகிறார்.

Suchandra Dasgupta

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி சுசிந்திரா தாஸ்குப்தா பலியானார். கொல்கத்தாவில் பராநகர் கோஷ்பாரா பகுதியில் சுசிந்திரா தாஸ்குப்தா வந்தபோது அவர் சென்ற வாகனம் மீது இன்னொரு இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சுசிந்திரா தாஸ்குப்தா மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுசிந்திரா தாஸ்குப்தா உயிர் பிரிந்தது. இளம் நடிகை சாலை விபத்தில் மரணம் அடைந்தது மேற்கு வங்க திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Suchandra Dasgupta

இந்தச் சம்பவம் குறித்து பேசிய அவருடைய கணவர் தேப் ஜோதி சென்குப்தா கூறுகையில், நேற்று ஷுட்டிங் முடிந்து வீடு திரும்பியபோது இந்தச் சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

From around the web