மதுபோதையில் தகராறு.. பிரபல திரைப்பட நடிகர் கைது.. வைரல் வீடியோ!

 
Vinayakan

‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகனை, மதுபோதையில் தகராறு செய்ததாக கூறி போலீசார் கைது செய்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1995-ம் ஆண்டு வெளியான ‘மாந்திரிகம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் விநாயகன். அதனைத் தொடர்ந்து, ஒன்னமன், ஜூனியர் சீனியர், சோட்டா மும்பை, சிறந்த நடிகர், தி டிரெய்ன், கம்மட்டி பாடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2006-ல் விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதன்பின், சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், காளை, சிறுத்தை, மரியான், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இவர், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

Vinayakan

கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர், எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் இருந்து அதிகளவு சத்தம் வந்ததாக அக்கம் பக்கத்தினர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மதுபோதையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட விநாயகன், அங்குள்ள அதிகாரியை தாக்கி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து எர்ணாகுளம் வடக்கு போலீசார் விநாயகனை கைது செய்தனர். காவல் நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததால், அவரை கைது செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் விநாயகன் மதுபோதையில் இருந்ததை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  எர்ணாகுளம் வடக்கு போலீசார் நடிகர் விநாயகனை கைது செய்தது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

From around the web