லாரி மீது கார் மோதி விபத்து.. பிரபல நகைச்சுவை நடிகர் பலி.. ரசிகர்கள் சோகம்!!

 
Sudhi

பிரபல நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி சாலை விபத்தில் காலமானார். அவருக்கு வயது 39.

கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘காந்தாரி’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கொல்லம் சுதி. பின்னர் கட்டப்பணியிலே ரித்விக் ரோஷன், கேசு ஈ வீடின்டே நாதன், எஸ்கேப் போன்ற படங்களில் நடித்துள்ளார். வெவ்வேறு தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். 

SUdhi

இந்த நிலையில் கொல்லம் சுதி தனது சக மிமிக்ரி கலைஞர்களான பினு அடிமலி, உல்லாஸ், மகேஷ் ஆகியோருடன் வடகரா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு நால்வரும் காரில் ஊர் திரும்பினர். அதிகாலை 4.30 மணியளவில் கைபமங்களம் என்ற பகுதிக்கு அருகே அவர்களது கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கொல்லம் சுதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கொல்லம் சுதி உயிரிழந்தார். அவருடன் பயணித்தவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

RIP

கொல்லம் சுதி மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது மறைவிற்கு மலையாள திரையுலகம் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web