கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் - பரபரப்பை உண்டாக்கிய யுவன்!!

 
Black-Dravidian-Proud-Tamil-Yuvan

தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பதிவிட்டுள்ளார்.

இளையராஜாவின் கருத்து சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் யுவன் சர்கர் ராஜாவின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பீட்டு எழுதிய கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதேநேரத்தில் இளையராஜா கருத்துக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்தனர். இதற்காக இணையதளங்களிலும் பெரிய கருத்து மோதல் நடந்து வருகின்றன. மோடி பற்றி எழுதிய என் கருத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், மீண்டும் இந்தி தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற ஆடையுடன், தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ள யுவன் சங்கர் ராஜா, நான் ஒரு கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என பொருள் படும் பதிவை பகிர்ந்துள்ளார்.

யுவனின்  இந்த பதிவு, இணையதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

From around the web