விஜய்சேதுபதி நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

 
KRK-trailer

விஜய சேதுபதி நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா என்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.


 

From around the web