வாரிசு படத்திற்கு பெண்களுக்கென பிரத்யேக காட்சி... குத்தாட்டம் போட்டு மகிழ்வு!!

 
coimbatore

கோவையில் ‘வாரிசு’ படத்திற்கு பெண்களுக்கென பிரத்யேக காட்சியை ஒதுக்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் அசத்தியுள்ளனர்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் கடந்த 11-ம் தேதி வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவான ‘வாரிசு’ திரைப்படத்துக்கு ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தது. எனினும் வெளியாகிய 7 நாட்களில் ரூ. 210 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

coimbatore

பொங்கல் விடுமுறை முடிந்த நிலையிலும் வாரிசு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருகிறது. குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக பல இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் பார்வையாளர்களாக உள்ள சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர்.

கோயம்புத்தூரை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கம் முழுவதும் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சிக்கு பெண்கள், மட்டும் பெண் குழந்தைகள் மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சிறப்பு காட்சியில் வாரிசு திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.


பெண்கள் மட்டுமே பார்வையிட்ட இந்தக் காட்சியில் பெண்கள் உற்சாக நடனமாடி கைகளை தட்டி வாரிசு படத்தை கொண்டாடினர். பெண்களுக்கு மட்டும் திரையிடப்பட்ட பிரத்யேக வாரிசு பட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web