கமலுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்!! 

 
Kamal-Udhaynidhi

நெஞ்சுக்கு நீதி படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

Kamal

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. மாமனிதன் படத்துக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் வேறு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (ஜூலை 25) சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார். 


இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

From around the web