நடுரோட்டில் அடிதடி... தலைமறைவான பிரபல தொகுப்பாளர்.. வலை வீசி தேடும் போலீஸ்!!

 
VJ-Nikki

தெருவில் வாகணத்திற்கு வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டதை அடுத்து பிரபல தொகுப்பாளர் நடுரோட்டில் அடிதடியில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த நிக்கி என்கிற நிக்கிலேஷ். இவர் தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு புரசைவாக்கம் பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது எதிரே தனியார் அலுவலகத்தில் அக்கவுண்டன்ட்டாக பணியாற்றி வரும் ராஜேஷ் என்பவருக்கும் நிக்கிக்கும் வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

VJ-Nikki

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் சாரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் தொகுப்பாளர் நிக்கியின் முகத்திலும் கண் புருவத்திலும் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் ராஜேஷுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் நிக்கி மற்றும் அக்கவுண்டன்ட் ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் ஏற்படுத்துதல், பிறரை தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தொகுப்பாளர் நிக்கி தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

VJ-Nikki

பிரபல தொகுப்பாளர் ஒருவர் சாலையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் புரசைவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கும், ராஜேஷுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

From around the web