வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகளை ரத்து செய்த தமிழ்நாடு அரசு! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Vijay-Ajith

வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கான ஸ்பெஷல் ஷோவை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்திருக்கும் வாரிசு மற்றும் அஜித் நடித்திருக்கும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியிடப்படுகிறது.

Varisu

வரும் பொங்கலுக்கு இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது. தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் பொங்கலுக்கு வருவதற்குள் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அளவிட முடியாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. ஒருபக்கம் தியேட்டர்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. மறுபக்கம் ரசிகர்கள் கோயில் கோயிலாக படியேறி வருகின்றனர்.

Thunivu

இந்த நிலையில் துணிவு வாரிசு படங்களுக்கான அதிகாலை காட்சிகளை தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 13 முதல் 16-ம் தேதி வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி  ஷோக்களுக்கு அனுமதி இல்லை என  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

From around the web