ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இனைந்தார் தமன்னா... அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்!

 
Tamannaah

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Rajinikanth

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் , தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோயர் நடிக்கின்றனர்.


இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பிரபல நடிகை தமன்னா கதாபாத்திரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஜெயிலர் படக்குழு. இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web