தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: இயக்குநர் பாக்யராஜ் வெற்றி

 
Bhagyaraj

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் , எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் 2 அணிகள் போட்டியிட்டனர்.

Bhagyaraj-SAC

பாக்யராஜ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிட்டார். துணைத் தலைவராக ஜி கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டி. செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், ரத்னகுமார்‌ ஆகியோர் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, பாபுகணேஷ், அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், ஹேமமாலினி, ஜெயப்பிரகாஷ், பட்டுகோட்டை பிரபாகர், ராஜா, ராஜா கார்த்திக், ராஜேஷ்வர், சேகர், வேல்முருகன், பா.விஜய் ஆகியோர் போட்டியிட்டனர்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான வசந்தம் எழுத்தாளர்கள் அணியில், தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிட்டார். துணைத் தலைவராக மனோபாலா, ரவிமரியா போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு மனோஜ்குமார், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோர் போட்டியிட்டனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு மதுரை தங்கம், பிரபாகர், ரங்கநாதன், சண்முகசுந்தரம் ஆகியோர் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, யுரேகா, பேரரசு, பொன்ராம், ராதாரவி, சாய்ரமணி, சாந்தகுமார், சரண், ஷரவணன் சுப்பையா, சினேகன், சிங்கம்புலி, ஏ,வெங்கடேஷ், விவேகா ஆகியோர் போட்டியிட்டனர்.

Association-election

மொத்தம் 570 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், வாக்களிக்க 490-க்கும் மேலானவர்களுக்கு வாக்களிக்க தகுதி உள்ளது. தற்போது தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாலர் உட்பட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மாலை 4 மணியளவில் வாக்குப் பதிவு நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் 192 வாக்குகள் பெற்று இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

From around the web