அதிர்ச்சி! ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் விபத்து... ஒருவர் பலி!

 
Kumar
ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் படப்பிடிப்பிற்கு மின்விளக்கு பொருத்தும் பணியின் போது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சத்யராஜ் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, பாகுபலி உள்ளிட்ட பல படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.
dead-body
அந்த வரிசையில் தற்போது வெப்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் ராக்கி திரைப்படத்தின் நாயகன் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை குகன் சென்னியப்பன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதேபோல் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராத விதமாக விபத்து நடந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kavaraipettai
படத்தின் படப்பிடிப்பின் போது லைட் மென் குமார் என்பவர் 40 அடி உயரத்தில் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கால் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web