கே.ஜி.எஃப் 2 படத்தின் வசூலை முறியடித்த ஷாருக்கானின் பதான்..! ரசிகர்கள் கொண்டாட்டம்

 
Sharukh khan

கே.ஜி.எப் 2 படத்தின் சாதனையை முறியடித்து ஷாருக்காடனின் பதான் படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பதான் திரைப்படத்திற்கு என்ன மாதிரியான விமர்சனம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்துள்ளனர்.

Pathan

இந்தி திரையுலகில் பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆமிர் கான் நடித்த லால் சிங் சத்தா, ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக், அக்சய் குமார் படங்கள் உள்ளிட்டவை சுமாரான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. அதே நேரம் சமீபத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்துடைய ஹிந்தி ரீமேக் நல்ல வசூலை குவித்தது. இடையே கேஜிஎப் 2 திரைப்படம் வசூலை அள்ளியது.

இந்நிலையில் பாலிவுட்டை தூக்கி நிறுத்தும் வகையில் பதான் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரும் வசூலை குவித்து வருகிறது. முன் பதிவில் மட்டும் 69 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pathan

“பதான் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, புதிய முதல் நாள் சாதனையைப் படைத்து வரலாறு படைத்துள்ளது. இந்தியில் மட்டும் சுமார் 53-54 கோடி மற்றும் தென்னிந்திய மொழிகளில் 1 அல்லது 1.50 கோடி வசூலித்ததாக தெரிகிறது” என பாக்ஸ் ஆபிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

From around the web