பரபரப்பு...நடிகர் சூரிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு!

 
Soori
மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை நடத்தியுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1999-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய சூரி, நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் திருமதி செல்வம், புசுபாஞ்சாலி, மைதிலி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 
Soori
2009-ம் ஆண்டு வென்னிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்திரமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், குள்ளநரி கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், முன்னணி நகைச்சுவை நடிகராக சித்தரிக்கப்பட்டார். இவருக்கு 2019-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி இந்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிகவரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சூரிக்கு மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன்' என்ற பெயரில ஓட்டல்கள் உள்ளன. சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த ஓட்டல்கள் சூரியுடையது என்பதால் எந்நேரமும் பிஸி'யாக செயல்பட்டன.
Soori
இந்த ஓட்டல்களுக்கு தலைமையிடமாக காமராஜர் சாலை தெப்பக்குளம் அருகே ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று மாலை வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழு சோதனை நடத்தினர். உணவுப்பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சோதனை நடந்தது. இச்சோதனையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்கவும் ஓட்டல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

From around the web