பிரபல சீரியல் நடிகை நிஷி சிங் காலமானார்!! அதிர்ச்சியில் திரையுலகம்!

 
Nishi-Singh

பிரபல தொலைக்காட்சி நடிகை நிஷி சிங் காலமானார். அவருக்கு வயது 50.

‘ஹிட்லர் தீதி’, ‘குபூல் ஹை’, ‘இஷ்க்பாஸ்’ மற்றும் ‘தெனாலிராமன்’ போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஷி சிங் பதாலி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மே மாதம் அவருக்கு கடுமையான பக்கவாதம் ஏற்பட்டது. அவரது குடும்பமும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், மக்களிடம் நிதி உதவி கோரினார்.

Nishi-Singh

இந்த நிலையில், நேற்று (செப். 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிஷி சிங்கின் கணவரும் நடிகருமான சஞ்சய் சிங் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிஷி 2019-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதன்பின், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவருக்கு தொண்டையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் எதையும் சாப்பிட முடியாமல் போனாது. வெறும் திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 16 அன்று, நிஷி சிங் தனது 50 வது பிறந்த நாளைக் கொண்டாடினாள். ஆனால், அவளால் எதுவும் பேச முடியாது என்றாலும் மகிழ்ச்சியாக இருந்தாள். இருப்பினும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காலமானார். 32 வருடங்களாக என்னுடன் வாழ்ந்தவள் இப்போது என்னுடன் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Nishi-Singh

மறைந்த நடிகைக்கு கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மறைவிற்கு திரையுலகினர், நண்பர்கள், உறவினர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

From around the web