பிரபல நடிகர் லெஸ்லி பிலிப்ஸ் திடீர் மரணம்; சோகத்தில் திரையுலகம்!!

 
Leslie Phillips

பிரபல பழம்பெரும் நடிகர் லெஸ்லி பிலிப்ஸ் காலமானார். அவருக்கு வயது 98.

1924-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் பகுதியில் லெஸ்லி பிலிப்ஸ் பிறந்தார். 1950-களில் திரைப்பட உலகில் நுழைந்த பிலிப்ஸ், கேரி ஆன் எனப்படும் சீரிஸில் நடித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

Leslie Phillips

அதனை தொடர்ந்து,  டாக்டர் இன் தி ஹவுஸ் என்ற நகைச்சுவை சீரிஸில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் பிலிப்ஸ். அதன்பிறகு ஜேகே ரவுலிங் எழுதி வெளியான ஹாரி பாட்டர் நாவல் திரைப்படமாகியது. இதில், வரும் மாயாஜால தொப்பிக்கு இவர் குரல் கொடுத்திருந்தார். கரகரப்பும், கேலியும் நிறைந்த மந்திர தொப்பியின் குரல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பிலிப்ஸ் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அவரது மனைவி ஸாரா, ‘நான் எனது அன்பான கணவரை இழந்துவிட்டேன். பொதுமக்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த நடிகரை இழந்துள்ளனர். அவர் மிகவும் எளிமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

RIP

பிலிப்ஸ் இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இன்றி பல கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்தும், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்திருக்கிறார். அவருடைய மரணம் திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே திரை பிரபலங்கள் அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

From around the web