நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது!! குவியும் வாழ்த்து!

 
Suriya

சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தேசிய விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கௌரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக சிறந்தப் படம், நடிகர், நடிகை, இயக்கம் என பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.

Soorarai-pottru

அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டது. பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் இது ஒளிபரப்பானது.

இதில் தமிழில் அதிகப்பட்சமாக சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. நடிகர் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் கொரோனா சூழ்நிலை காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கிய சூர்யாவுக்கு தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya

நாளை சூர்யா தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அவருக்குக் கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசு என இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

From around the web