19 வயது மகளுக்கு அம்மாவாக நடிக்கும் மீரா ஜாஸ்மின்!!

 
Meera-jasmine

‘மகள்’ என்ற மலையாள படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள மீரா ஜாஸ்மின் 19 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார்.

தமிழ், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த மீரா ஜாஸ்மின் 6 வருடங்கள் நடிக்காமல் இருந்து விட்டு தற்போது ‘மகள்’ என்ற மலையாள படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் 19 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இதுகுறித்து மீரா ஜாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், “மகள் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் உங்கள் இமேஜ் பாதிக்காதா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.

அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கதாபாத்திரம் எனக்கு பிடித்து இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றபோது பதற்றமாக இருந்தது. என் மகளாக நடிக்கும் தேவிகாவும், நானும் நெருங்கிய தோழிகளாகி விட்டோம். நாங்கள் அம்மா, மகள் என்பதை விட சகோதரிகள் போல் இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.

சினிமா முன்பை விட யதார்த்தமாக மாறி உள்ளது. நடிக்கும்போது இந்த மாற்றத்தை நான் கவனித்தேன். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தபோது பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என்றார்.

From around the web