அர்ஜூன் தாஸுடன் காதலா..? விளக்கம் அளித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி!!

 
Aishwarya

அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

2017-ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அவர் நடிப்பில் வெளியான 'மாயநதி', 'வரதன்', 'காணக்காணே' உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழில் 'ஆக்ஷன்' 'ஜகமே தந்திரம்' 'கார்கி' படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

Arjundas-Aishwarya

பொன்னியின் செல்வன் 1, கட்டா குஸ்தி, அம்மு, கார்கி மற்றும் அர்ச்சனா 31 நாட் அவுட் உட்பட 9 படங்களுடன் கடந்த ஆண்டில் ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் ஒரு திறமையான நடிகை, அவர் சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். உண்மையில், அவர் கார்கியின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா லக்ஷ்மி ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ‘இதய’ குறியீடுடன் பகிர்ந்துள்ளார். இதனால் , இருவரின் ரசிகர்களும் ‘காதலுக்கு வாழ்த்துக்கள்’ என கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

Aishwarya laxmi

இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். அதன் படி, நண்பர்களே நான் கடைசியாக வெளியிட்ட புகைப்படம் இவ்வளவு பெரிய விஷயமாகும் என எதிர்பார்க்கவில்லை. அதே போல் நாங்கள் இருவரும் ஒரே படத்தில் படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டதாகவும், எங்களுக்குள் காதல் எல்லாம் ஒன்றுமில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

From around the web